தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரை முடிந்ததும் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும், பாமக கவுரவத்தலைவர் ஜி.கே. மணியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். இது குறித்து அவர்கள் கூறும்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டதாக கூறினர்.
ஏற்கனவே அதிமுக, தங்கள் கூட்டணிக்கு பாமகவை இழுக்க பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனாலும் பாமக பிடிகொடாமல் செல்கிறது. இந்த நிலையில் என்னதான் முடிவு செய்திருக்கிறீர்கள் என்ற தொனியில் இந்த சந்திப்பு இருந்திருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முன்னதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும், ஜி.கே. மணியிடம் சிறிது நேரம் உரையாடினார். அவரும் நலம் தான் விசாரித்தாரா என்பது தெரியவில்லை.