வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் உரை படிக்க தொடங்கினார். சரியாக 12 மணிக்கு உரையை நிறைவு செய்தார். வேளாண் துறைக்கு ரூ.42,281.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடியும், நெல் கொள்முதல் மானியத்துக்கு ரூ.500 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.