தமிழகத்திலுள்ள ஒருங்கிணைந்த அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப்பெறும பள்ளிகளில் பணியாற்றும் மொத்த ஆசிரியர்களை கணக்கிட்டு அதில் பார்வையற்றோர்களுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு செய்து ஆசிரியர் நியமனம் வழங்கிட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேரச்சிப்பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனத் தேரவிலிருந்து முழுமையாக விலக்களித்து உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் சங்கம், பட்டதாரிகள் சங்கம்
சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அரசு விரைவு போக்குவரத்து கழகம் எதிரில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். படித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சாலை மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தி கைது செய்தனர்.