திருச்சி கருமண்டபம், நேரு நகரை சேர்ந்தவர் பாஸ்கரின் மனைவி புனிதா (33). இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தியாகப்பர் தேவாலயம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் புனிதாவிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறுத்து புனிதா கண்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அறிவழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.