Skip to content

இடைவிடாது 125 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்த அமைச்சர்

நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த 2024-25 பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.  கோவையில் பூஞ்சோலை  என்ற பெயரில்   மாதிரி இல்லம் ஏற்படுத்தப்படும்.  கரூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய இடங்களில் சிறிய  ஜவுளி பூங்கா ஏற்படுத்தப்படும். 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு  பணி வழங்கப்பட்டுள்ளது.   திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். ஆவின் நிறுவனம் ரூ.60 கோடியில் நவீனப்படுத்தப்படும்.

முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ-1000 வழங்கப்படும்.  இந்த திட்டத்திற்க தமிழ்ப்புதல்வன் என பெயரிடப்படுகிறது.

சமூக பாதுகாப்பு துறை  இனிமேல் குழந்தைகள் நலன் துறை என  மாற்றப்படுகிறது.

சென்னை அடுத்த முட்டுக்காடு அருகே கலைஞர் மாநாட்டு மையம் 3 லட்சம் சதுர அடி  பரப்பில் அமைக்கப்படும்.

இயற்கை பேரிடரால் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக வெள்ளபாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும்  மத்திய அரசால் வழங்கப்படவில்லை.  மெட்ேரா ரயில் பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதிலும் மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. மாநில் நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும்.  இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான உச்ச வரப்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வரும் ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்.  வானிலையை துல்லியமாக கணிக்க  2 புதிய  டாப்ளர்  ரேடார்கள் அமைக்கப்படும். ஜிஎஸ்.டியால் தமிழகத்திற்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.

இவ்வாறு  அவர் பட்ஜெட் உரை வாசித்தார். காலை 10 மணிக்கு  பட்ஜெட் உரை வாசிக்கத் தொடங்கிய அமைச்சர் 12.05 மணிக்கு நிறைவு செய்தார்.  அதாவது 125 நிமிடங்கள் இடைவிடாது உரையை படித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *