Skip to content
Home » சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..

சேலம் சென்ற ரயில் திருச்சியில் பழுது.. பயணிகள் அவதி..

  • by Authour

மயிலாடுதுறையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை 6.20 மணிக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. 8 பெட்டிகளுடன் புறப்பட்டு வந்த இந்த ரயில் காலை 9.55 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தது. பின்னர் அங்கிருந்து கோட்டை ரயில் நிலையம் சென்றடைந்தது.
அப்போது இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரயில் கோட்டை ரயில் நிலையத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்மலை பணிமனையில் இருந்து ரயில்வே ஊழியர்கள் சென்று இன்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஏர்
லீக்கேஜ் ஆனதால் இன் ஜினை உடனடியாக சரி செய்ய முடியாத நிலை இருந்தது. இதையடுத்து திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மாற்று இன்ஜினை வரவழைத்து பொருத்தப்பட்டது. பின்னர் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் 2 மணி நேரமாக பயணிகள் ரயிலில் அவதிப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *