Skip to content
Home » கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

கடையில் இருந்த சிறுவனை ஏமாற்றி பணம் அபேஸ்.. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சியை அடுத்துள்ள திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் செந்தில் என்பவர் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடையில் இருந்த அவர் பிப்ரவரி 17ஆம் தேதியான நேற்று மதியம் ஒரு மணி அளவில் வெளியே சென்றுள்ளார் இதனால் அவரது கடையில் அவரது மகன் சிறுவன் ஒருவன் கடையைப் பார்த்துக் கொள்வதற்காக இருந்துள்ளான். அப்போது அங்கு முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மறுவாழ்வு மையம் வைத்திருப்பதாக அவர்களுக்கு பழைய துணிகள் மற்றும் பழைய புத்தகங்கள் தங்களால் முடிந்த உதவிகள் செய்யுமாறு கூறி 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அந்த கடைக்கு சென்று அந்த சிறுவனிடம் விளம்பர நோட்டீசை கொடுப்பது போல் கொடுத்து கல்லாபெட்டியில் இருந்த பணத்தை நூதன முறையில் ரூபாய் 3000 திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து கடை உரிமையாளர் செந்தில் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *