‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராம்குமார். விஷ்ணு விஷால், முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம், மூடநம்பிக்கைக்கு எதிராக பேசியிருந்தது. இந்தப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இருவரும் ‘ராட்சசன்’ எனும் படத்தில் இணைந்தனர். த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
