விருதுநகர் மாவட்டம் ராமுதேவன் பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த கட்டிடத்தில் பட்டாசு தயாரிப்பு பணியில்25க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில் 8 பேர் அந்த இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். மற்றவர்கள் உடல் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.