புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோடமின்-பி என்ற அபாயகர வேதிப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் புதுச்சேரி மற்றும், விழுப்புரம் மாவட்டம் எல்லையான கலைவன நகர் பகுதியில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் உற்பத்தியாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உற்பத்தி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சென்னையில் ஆட்டோ, டாக்சி சங்கத்தின் மாநாட்டை தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பஞ்சு மிட்டாயை தடை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்; விற்பனையை கண்காணிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.