ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை..