புதுக்கோட்டையில் தலைமை தபால்நிலையம் முன்பு தொ.மு.ச.உள்ளிட்ட அனைத்து தோழமை தொழிற்சங்கத்தினர் மக்கள் விரோத பிஜே.பி.மோடி அரசைக்கண்டித்து பொதுவேலை நிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதொ.மு.சசெயலாளர்கி.கணபதி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500க்கு மேற்பட்டோர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். சி.பி.ஐ.மாவட்டசெயலாளர் செங்கோடன், ஐக்கி யம் வாயில்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதவன், சி.ஐ.டி.யூமாவட்டசெயலாளர் ஸ்ரீதர், ஏ.ஐ.டி.யூ.சிமாவட்டசெயலாளர் ஜீவானந்தம், மாவட்ட தொ.மு.ச.தலைவர்அ.ரெத்தினம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொ.மு.பொதுச்செயலாளர்வேலுச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர் க.சுந்தர்ராஜன்
(எஸ்.கே.எம்) உள்ளிட்ட தொ.மு.ச.,சி.ஐ.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி, ஏ.ஐ.சி.சி.டி.யூ, எஸ்.கே.எம்., ஆகிய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்கள் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற
44 சட்டங்களை 4 சட்டதொகுப்புகளாக திருத்துவதைகைவிடக் கோரியும், ஈ.எஸ்.ஐ. பிடித்தம்செய்திடசம்பள உச்சவரம்பை மாற்றி அமைத்திடகோரியும், ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிடக்கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளைவழியுறுத்திபொதுவேலைநிறுத்தம்மறியலில்ஈடுபட்டனர்.