சென்னை பெருங்களத்தூர் – தாம்பரம் இடையே தண்டவாளத்தில் பெண் ஒருவர் இறந்த கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரயில்வே போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று பலத்த காயங்களுடன் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் வழக்கறிஞர் அமிர்தவல்லி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.