விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வேண்டியும், விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு மத்திய பிஜேபி அரசிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதனால், மத்திய பிஜேபி அரசின் மூத்த நிர்வாகள் போராட்ட விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது நேற்று. ஆனால், அதில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் தீர்வு எட்டப்படவில்லை. இதனால், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை பிஜேபி நிர்வாகிகளுக்கு தோல்வியில் முடிந்தது. இதனால், விவசாயிகள் அறிவித்தபடி தலைநகர்
டெல்லியில் இன்று ரயில் மறியல் செய்வதை ஆதரித்தும், கோரிக்கையை நிறைவேற்ற கோரியும்
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் விவசாயிகள் திருச்சி காவிரி ரயில் பாலத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி விவசாயிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.