அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் பாட்டுப்
பாடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.