அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் ஆலய மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாசி திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 25ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. கடல் கடந்தும் பல வெற்றிகளைக் கொண்ட சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனார் கட்டப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள கம்யூனிட்ட சொல்லபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சோழீஸ்வரர் கோவில் கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள eecoவில் தினந்தோறும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு பக்தர்களும் வருகை தந்து பெருவுடையாரை தரிசனம் செய்து வருகின்றனர். கங்கைகொண்ட சோழபுரம் சோழிஸ்வரர் ஆலயத்தின் 8 ஆம் ஆண்டு மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இன்று தொடங்கி எட்டு நாட்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வருகின்ற 21 ஆம் தேதி திருக்கல்யாணமும், 23ஆம் தேதி ஒன்பதாம் நாள் காலை 6 மணிக்கு திருத்தேர் பவனியும் நடைபெற்ற உள்ளது. இதனைத் தொடர்ந்து விழாவில் முக்கியமான தீர்த்தவாரி நிகழ்ச்சி 10 ஆம் நாளான 24 ஆம் தேதி தீர்த்தவாரி சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா , சோழிஸ்வரர் வழிபாட்டு குழுமம் சார்பில் அம்பாள் உஸ்சவம், சண்டிகேஸ்வரர் உஸ்சவம், பிரமோற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருவுடையாரை வழிபாட்டு சென்றனர்.