கரூர் மாவட்டம், கோவை ரோடு பகுதியில் உள்ள பாரதி நகரில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேக யாகசாலைகள் அமைக்கப்பட்டு முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை மேள தாளங்கள் முழங்க ஆலயத்தின் சிவாச்சாரியார் தலையில் சுமந்தவாறு கோபுரம் கலசம் வந்தடைந்தார். அதன் தொடர்ச்சியாக வானவேடிக்கையுடன் கோபுர கலசத்திற்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மூலவர் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவருக்கு மகா தீபாரதனைஏ காட்டப்பட்டது.
பின்னர் கூறி இருந்த அனைத்து பக்தர்களுக்கும் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.