இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. 5 டெஸ்ட் போட்டிகளில் அட உள்ள நிலையில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2ம் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. 3வது போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ரோகித், ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஜெய்வால் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கில் டக் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து வந்த பட்டிதாரும் அவுட் ஆனார். 13 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழந்து 49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ரோகித் 19, ஜடேஜா 3 ரன்களுடன் நிதானமாக ஆடிக்கொண்டிருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் இந்தியா 31 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. ரோகித் 53, ஜடேஜா 39 ரன்கள் எடுத்திருந்தனர்.
தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இதுவரை 499 விக்கெட்டுகள் (97 டெஸ்ட்) எடுத்துள்ளார். இன்றைய டெஸ்டில் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி 500 விக்கெட் என்ற மைல் கல்லைஎட்டும் 2-வது இந்தியர் என்ற சாதனையை படைக்கலாம்
அதுபோல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சனும் சாதனையின் விளிம்பில் உள்ளார். அவர் இன்னும் 5 விக்கெட் எடுத்தால் டெஸ்டில் 700 விக்கெட்டை கைப்பற்றிய வீரர் ஆவார். ஏற்கனவே ஷேன் வார்னே, முரளிதரன் ஆகியோர் மட்டுமே டெஸ்டில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். அஸ்வின், ஆண்டர்சன் ஆகியோருக்கு ராஜ்கோட் சாதனை களமாக அமையும் என்ற எதிர்பார்ப்பில் இரு நாட்டு ரசிகர்களும் உள்ளனர்.