Skip to content
Home » கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

கோவை மருதமலை கோவில் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை……

  • by Senthil

முருகப் பெருமானின் ஏழாவது படை வீடு என்று போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வனப் பகுதியை ஒட்டி மருதமலை அமைந்திருப்பதால் வனவிலங்குகள் கோவில் படிக்கட்டுகள் மற்றும் சாலை வழியாக கடந்து செல்வது வழக்கம். எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி மலை அடிவாரம் படிக்கட்டுகள் கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மருதமலை கோவில் வளாகம் அருகே ஒரு சிறுத்தை சாலை கடந்து சென்றது இதனை அந்த வழியாக சென்ற பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மருதமலையில் இரவு பக்தர் ஒருவர் காரில் செல்லும் போது மலை பாதையில் முதல் வளைவில் சிறுத்தை ஓடியது இதனை அவர் படம் பிடித்து வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் மருதமலை கோவிலில் மீண்டும் சிறுத்தை தென்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!