திருச்சி உறையூர் கீரைக் கொல்லை தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் முகமது ஜமீர் (43). இவர் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து வருகிறார் .நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் குடமுருட்டி ரயில்வே கேட் அருகில் வந்த போது 3 மர்ம நபர்கள் முகமது ஜமீரை வழிமறிது அவரை தாக்கி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து முகமது ஜமீர் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்