பெரம்பலூர் அருகே ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிப்பு உள்ளது. அங்கு, டி.எஸ்.பி வளவனுக்கு ஓட்டுனராக இருப்பவர் காவலர் சதீஸ்குமார். இவரது மனைவி பிருந்தா (24) நேற்று முன் தினம் இரவு வீட்டு வாசலில் நின்றுக் கொண்டு போன் பேசிக் கொண்டிருந்தார். காவலராக இருக்கும் பிரபாகரனும் அக்குடியிருப்பில் வசித்து வந்த அவர் போதையில் போன் பேசிக் கொண்டு இருந்த பிருந்தாவை வாயை பொத்தி, மொட்டை மாடிக்கு தவறான நோக்கத்தில் தூக்கி சென்றார். பிரபாகரனை தள்ளிவிட்டு தப்பி வந்த பிருந்தா தனது கணவர் சதீஸ்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார்.
பின்னர், இது தொடர்பாக பிருந்த அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் போலீசார் பிரபாகரனை பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.