அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.35.88 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். இம்முகாமில், வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) இளங்கோவன், உடையார்பாளையம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மகாலெட்சுமி,
முத்துவாஞ்சேரி ஊராட்சி மன்றத்தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வக்கொடி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.