பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் , ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் நேற்று தமிழக அமைச்சர்கள் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ்ஆகியோர் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகளான தியாகராஜன், வெங்கடேசன், தாஸ் உள்ளிட்டோர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஜாக்டோஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிப் 15ம் தேதி வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது. என்றும் பிப்.15ஆம் தேதி அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் எனஅனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர கடிதம் அனுப்பியுள்ளார்..