சென்னை தலைமைச்செயலகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள் சர்வாணிகா துபாயில் நடைபெற்ற 9 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில்,
இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கம்,1 வெள்ளிப்பதக்கங்களை வென்றமைக்கும், பிப்ரவரி மாதம் 19-02-2024 முதல் 28-02-2024 வரை மலேசியா-கோலாலம்பூரில் நடைபெற உள்ள 10 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில்(Commonwealth Chess
Championship) இந்தியா சார்பில் கலந்துகொள்வதை முன்னிட்டு ஊக்கத்தொகையாக ரூபாய் 1.78 இலட்சம் காசோலையும், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வழங்கினார்.
அதன் பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.