மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது கண்டு நகராட்சி அதிகாரிகள் சோதனை ஈடுபட்டு வந்தனர்.
தனியார் ஏஜென்சி மூலமாக பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளுக்கு மொத்தமாக விற்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பெயரில்
மயிலாடுதுறை நகராட்சி சுகாதார அலுவலர் சுரேஷ் தலைமையில் நகராட்சித்துறையினர் ஆய்வு மேற்கொண்டர். அப்போது, பூக்கடைத்தெரு என்ற இடத்தில் தனியார் மொத்த வியாபார கடையில் லோடு வேனில் பொருட்கள் இறங்கியதை பார்த்துள்ளனர். அந்த வேனை சோதனையிட்டதில், அதில் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பேப்பர் இலை, கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உள்ள சென்று ஆய்வு செய்த போது அங்கும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவந்து தெரியவந்தது. இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் சுமார் 300கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அக்கடைக்கு ரூ.10 ஆயிரம், திருநாகேஸ்வரம் தனியார் ஏஜென்சிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து லோடு வேனை பறிமுதல் செய்தனர்.