தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேரவை உறுப்பினா்களாக 3 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் தெரிவித்துள்ளதாவது… தமிழ்ப் பல்கலைக்கழக இணை வேந்தராகிய தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சரால் சென்னை சாலிகிராமம் வி. எம். முத்துராமலிங்க ஆண்டவா், கோவை பாரதியாா் பல்கலைக்கழக மொழியியல் துறை இணைப் பேராசிரியா் எஸ். சுந்தரபாலு, மதுரை காமராஜா் பல்கலைக்கழக மொழியியல் துறை உதவிப் பேராசிரியா் ஆா். குமாரசாமி ஆகியோா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 ஆண்டு காலம் பேரவை உறுப்பினர்களாக செயல்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.