தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 37 வது வார்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு பூங்காவை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 34 வது வார்டில் ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இ-சேவை மற்றும் நூலக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் 37 வது வார்டு நியூ காவேரி நகர் பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கல்வி நிதி திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அதே வார்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31.50 லட்சம் செலவில் பூங்கா அழகுப்படுத்தும் பணி நடைபெற்றது. 39வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அண்ணா நகர் அருகே புதிய அங்கன்வாடி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் 43வது வார்டு ராம் நகர் பகுதியில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் கல்வி நிதி திட்டத்தின் கீழ் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இவை அனைத்தையும் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் சென்று பார்வையிட்டு திறந்து வைத்து அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, மாமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, சுந்தர செந்தில், உஷா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.