Skip to content
Home » வேலைத் தேடி சென்ற மகன் மாயம்…. தாய் கண்ணீர் மல்க புகார்…

வேலைத் தேடி சென்ற மகன் மாயம்…. தாய் கண்ணீர் மல்க புகார்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. கூலி தொழிலாளர் . இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு சிவகுமார் மற்றும் ராஜா என இரு மகன்கள், ஒரு மகள். இந்நிலையில் விஜயா, தஞ்சை கலெக்டர் அலுவவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

எனது இளைய மகன் ராஜா கடந்த ஜன.16ம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வேலை தேடி சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதன் பிறகு அவரை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் என்றே வருகிறது. இது குறித்து திருப்பனந்தாள் போலீசில் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது மகனின் நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் மிகவும் வேதனையில் உள்ளோம். எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!