சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார் டிரைவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் உதவியாளர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. 8 நாட்களாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. மகனின் உடலை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்தார் சைதை துரைசாமி. சில நாட்களுக்கு முன்பு வெற்றியின் உடைகள் இருந்த பெட்டி போன்றவை கண்டெடுக்கப்பட்டது. ரத்தக்கறை மாதிரிகளை வைத்து டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்து நடந்த 8 நாட்களுக்குப் பிறகு வெற்றி துரைசாமியின் உடல் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் மீட்கப்பட்டது. பாறையின் அடியில் உடல் சிக்கியிருந்த நிலையில், மீட்பு படை வீரர்கள் அவரது உடலை கண்டுபிடித்தனர். வெற்றி துரைசாமியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தொடர்ந்து கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக மனித நேய அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:வெற்றி துரைசாமி உடலை தேடும் பணி தீவிரம்வெற்றி துரைசாமி உடல் கண்டுபிடிப்புவெற்றி துரைசாமி உடல் தகனம்