Skip to content
Home » பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரிப்பது பெருமை.. கோவையில் ஐஜி பாராட்டு…

பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரிப்பது பெருமை.. கோவையில் ஐஜி பாராட்டு…

  • by Senthil

தமிழகத்தில் பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரித்து வருவது பெருமையாக உள்ளது எனவும் – மாணவ மாணவர்கள் அனைத்து துறையிலும் சாதனை மேற்கொள்ள பெற்றோர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் (“ஐ.ஜி”)பவானீஸ்வரி. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள (தனியார்) பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் ஒரு அங்கமான அல்கெமி  பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி பி.பி.ஜி.கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் (“ஐ.ஜி”)பவானீஸ்வரி கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பெற்றோர்கள் மத்தியில் அவர் பேசியதாவது

உள்ளபடியே இந்த பள்ளியின் நிர்வாகம் பெரும்பாலும் பெண்களால் நிர்வகிக்கபடுவதை அறிந்து தாம் பெருமைபடுவதாக கூறிய அவர் – பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருவதை சுட்டி காட்டினார்.

குறிப்பாக விளையாட்டு துறையில் பெண்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும் ஆனால் தங்களுடைய இருப்பிடத்தை தாண்டி சாதிக்க நினைக்கக்கூடிய மாணவ மாணவர்களின் கனவை பெற்றோர்கள் தற்போதுள்ள தலைமுறைகளின் ஒரு சில அச்சங்களை பயத்தில் கொண்டு அடுத்த கட்டத்திற்கு மாணவ மாணவர்களை கொண்டு செல்ல அஞ்சுகின்றனர்.

பெற்றோர்கள் தான் தைரியத்தைக் கொண்டு குழந்தைகளுக்கு ஒழுக்க கல்வியை ஊக்குவித்து அவர்களின் சாதனைக்கும் கனவிற்கும் ஊன்று கோளாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பதற்கு என்ற காலம் மாறிவிட்டதாகவும் கல்வி மட்டுமே நம் பிள்ளைகளின் முதுகெலும்பு எனவும் அதற்கு பெற்றோர்களாகிய நாம் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் – குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கான கல்வி கனவுகள் அதிகரித்து வருகின்றது என்பது பெருமையாக உள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் பேசிய டாக்டர் தங்கவேலு – கல்வி கற்கும் முறை தற்போது மாறி உள்ளதை குறிப்பிட்ட அவர் ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து மாவட்ட,மாநில,சர்வதேச அளவில் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்த அல்கெமி பள்ளி மாணவ மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.

பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமையில் நடைபெற்ற விழாவில் – நிர்வாக அறங்காவலர் சாந்தி தங்கவேலு,அஸ்வின் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அஸ்வின்,கல்லூரியின் இயக்குனர் அக்‌ஷய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!