தமிழக சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரையை கவர்னர் ரவி வாசிக்கவில்லை. அவராகவே அங்கு சில வார்த்தைகள் பேசினார். பின்னர் அவர் தேசிய கீதம் பாடுவதற்கு முன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டார். இது குறித்து ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
சபாநாயகர் தமிழாக்கம் வாசித்ததும், தேசிய கீதம் இசைக்கப்படும் என கவர்னர் எழுந்து நின்றார்.சபாநாயகர் அப்பாவு வசைபாடத் தொடங்கினார். அதனால் கவர்னர் வெளியேறினார். கோட்சேவை பின்பற்றுபவர் என கவர்னரை சபாநாயகர் விமர்சித்தார். ஆளுநர் உரையில் உண்மைக்கு அப்பாற்பட்ட தவறான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்கவில்லை. சபாநாயகர் அப்பாவு தனது மாண்பையும், அவையின் மாண்பையும் தாழ்த்தும் வகையில் நடந்து கொண்டாா்.
கவர்னர் உரைக்கு முன்னும், பின்னம் தேசிய கீதம் இசைக்க வலியுறுத்தி்னோம். தவறான தகவல்களை அளிக்கும் இடமாகவும், ஒருதலைபட்சமாக நடக்கும் இடமாகவும் சட்டமன்றம் இருக்க கூடாது. எனவே பதவியின் கண்ணியத்திற்கு மதிப்பளித்து கவர்னர் வெளியேறினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.