Skip to content

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ. 11 லட்சம் மோசடி…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு கடந்த 2023, நவம்பர் 20 ஆம் தேதி டெலிகிராம் செயலி மூலம் வந்த தகவல் வந்தது. அதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய அந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர், மர்ம நபர் கூறிய வங்கிக்  கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ. 11 லட்சம் வரை அனுப்பினார். பின்னர், ரியல் எஸ்டேட் உரிமையாளரின் அழைப்புகளை அந்த மர்ம நபர் எடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *