கோவை மாவட்டம், சூலூர் சங்கோதி பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வட மாநில நபர்கள் தோட்டங்களில் தனியே இருந்த வீடுகளில் திருடும் முயற்சித்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது ஏறி ஓட்டை பிரித்து உள்ளே இறங்கவும் முயற்சித்துள்ளனர் அங்குள்ள வட மாநில நபர் ஒருவரின் செல்போன்களையும் திருடிச் சென்றுள்ளனர் இது குறித்த கருமத்தம்பட்டி
போலீசார் வழக்கு பதிவு செய்து 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த சிசி டிவி காட்சிகள் தற்போது இப்பகுதியில் உள்ள whatsapp குரூப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.