பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மதுபான கடையில் இரண்டு கோஷ்டி இளைஞர்களுக்கு இடையே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகராறில் பெரம்பலூர் பெரியார் சிலை பின்புறம் உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த பாண்டியன் மகன் எலி என்கிற ராகுல் என்கிற வெங்கடேசன் வயது 20
மற்றும் திருச்சியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் வயது 26 என்கிற இளைஞர்களை பெரம்பலூர் சங்குபேட்டையைச் சார்ந்த திருவள்ளூர் தெருவில் வசிக்கும் சீனிவாசன் மகன் தாஸ் என்கிற தசரதன் வயது 19 என்கிற நபரும், பெரம்பலூர் சமத்துவ புரத்தில் வசிக்கும் சங்கர் என்பவரின்
சிவசுப்பிரமணியன் என்கிற மார்க்கெட் சிவா என்பவரும் சம்பந்தப்பட்ட நபர்களை அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகாயம் ஏற்படுத்தினார்.
வெட்டப்பட்டதில் காயம் அடைந்த நபர்கள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் வெட்டப்பட்டவர்களை CCTV பதிவை வைத்துள்ளது போலீசார் தேடி வருகின்றனர்.