கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் என்ற தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி பொதுமக்கள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் உடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கலந்தாய்வு கூட்டம் ஆனது நடைபெற்றது நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த குழு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார், வளர்மதி செம்மலை, ஆர் பி உதயகுமார் ஓ எஸ் மணியன் வைகை செல்வன் எஸ் பி வேலுமணி, உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர் பின்னர் விவசாய பிரதிநிதிகள் தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டது பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நத்தம் விஸ்வநாதன் அதிமுகவின் தேர்தல் அறிக்கை என்பது அபூர்வமான தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற அறிக்கையாக இந்த தேர்தல் அறிக்கை உள்ளது நூற்றுக்கும் மேற்பட்ட சங்கத்தினர்கள் இடம் கேட்டு இந்த தேர்தலை அறிக்கையானது முழுமையாக வெளியிடப்பட உள்ளது திமுக தேர்தல் அறிக்கை மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் எடப்பாடி யார் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என தெரிவித்தார்.