இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் 1991 சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோவையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோசங்களை எழுப்பினர். கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவஹீத் ஜாமத் சார்பில் இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி உக்கடம் பகுதியில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட
தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் சபீர் அலி கலந்து கொண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991படி மத நல்லிணக்கம் மற்றும் மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முதன்மை நோக்கத்துடன் வழிபாட்டு தலங்களை பாதுகாத்தலை ,இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், என மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டு பாதுகாப்பு சட்டம் என்னாச்சு ?வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் இந்தியாவின் இறையாண்மை காப்போம் உள்ளிட்ட கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.