பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்று வரும் பன்னாட்டு விளையாட்டு கருத்தரங்கு நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
திருச்சி திருவானைக்காவல் வழியாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரிக்கு வருகை தரும் தமிழக ஆளுநர் RN ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதற்காக திருச்சி திருவானைக்கோவில் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஆளுநர் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும், கொள்கைகளையும் விமர்சிப்பதாகவும் இதனை கண்டித்து திருச்சி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் கருப்புக் கொடி காட்டி தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் . திடீரென தமிழக ஆளுநர் வரும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், ரேணுகா, பா.லெனின், கார்த்திக், மணிமாறன் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, அபிசேக புரம் பகுதி செயலாளர் வேலுச்சாமி, பாலக்கரை பகுதி செயலாளர் சுரேஷ் MC, பொன்மலை பகுதி செயலாளர் விஜேந்திரன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சூர்யா, மாவட்ட செயலாளர் மோகன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, மாவட்ட பொருளாளர் நவநீதகிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.