திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் ஸ்ரீ மகா காலீஸ்வரி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீ சூலினி துர்கை அம்மனுக்கும் தை அமாவசையைய முன்னிட்டு நிகும்பலா எனப்படும் வரமிளகாய் கொண்டு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தை அமாவாசையை முன்னிட்டு, நவதானியங்கள் மூலிகைகள், பழங்கள் வஸ்திரங்கள் மற்றும் வர மிளகாய் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி,
ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீ சூலினி துர்கை அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், திரவிய பொடி, மஞ்சள் , குங்குமம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகத்தில் பூஜை செய்யப்பட்ட புனித கலச நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு மகா தீபாரமே நடைபெற்றது. இதில் அப்பகுதி சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.