பாஜக தேசிய தலைவர் ஜேபி நாட்டா நாளை சென்னை வர உள்ளார். சென்னையில் நடைபெறும் அண்ணாமலையின் பாத யாத்திரையில் ஜேபி நட்டா பங்கேற்க திட்டமிட்டுள்ளார். பாதயாத்திரையில் பங்கேற்று விட்டு கட்சி பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா உரை நிகழ்த்த வைக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இதற்கிடையே, சென்னையில் ஜேபி நட்டா பாத யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை வாலாஜா சாலையில் நடைபெறும் பாத யாத்திரையில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பாஜக நிர்வாகிகள் அனுமதி கேட்டனர். எனினும், ஜேபி நட்டா பாதயாத்திரை செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை சென்ட்ரல் மிண்ட் சாலையில் ஜேபி நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்துள்ளனர்…
சென்னையில் நட்டா பாதயாத்திரை செல்ல போலீசார் அனுமதி மறுப்பு..
- by Authour