கரூரைச் சேர்ந்த கலா என்பவர் கடந்த 10.12.23-ம் தேதி என்று அவர் வசிக்கும் தெருவின் நடந்து சென்றபோது கரூரை சேர்ந்த 1) அய்யா (எ) பால்பாண்டி, 2) வினோத் குமார், 3)
பாண்டி, (எ) பரணி பாண்டி மற்றும் 4) கொடியரசு ஆகிய நான்கு பேரும் பதிவு எண் இல்லாத TVS Suzuki Max 100 என்ற இருசக்கர வாகனத்தில் வந்து கலா கழுத்தில் அணிந்திருந்த 8 ¼ சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்கள்.
இது குறித்து கரூர் நகர காவல் நிலையத்தில் குற்ற எண். 767/23 பதிவுசெய்யப்பட்டு எதிரிகள் நான்கு பேரையும் கைது செய்து பறித்துச்சென்ற நகையை மீட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கின் எதிரிகளான கரூரை சேர்ந்த 1) அய்யா (எ) பால்பாண்டி மற்றும் 2) வினோத் குமார் ஆகிய இருவரையும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகரர் பரிந்துரையின் பேரில் கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.