கோவையயில் இருந்து அசுர வேகத்திலிருந்து வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி இரண்டு பேர் பலி.
இன்று மாலையில் வித்யாலயா கல்லூரி அருகில் ஒரு மிகப்பெரிய விபத்து நடந்திருக்கிறது. இருசக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி மற்றும் ஒரு மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை அசுர வேகத்தில் கோவையில் இருந்து வந்த தனியார் பேருந்து அவர்கள் மீது மோதி சம்பவ இடத்திலேயே குழந்தை மற்றும் தந்தை பரிதாப உடல் நசுங்கி இறந்துவிட்டார்கள். அந்த இடத்தை பார்க்கும் பொழுது மிகவும் கோரமான விபத்தாக இருந்தது. அந்தப் பேருந்தின் முன் சக்கரத்தின் கீழே 30 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு நசுங்கி கிடக்கிறது. தப்பி பிழைத்த அந்த மனைவியின் கதறல் சுற்றி இருந்தவர்களுடைய மனதை ரணமாக்கியது. இவ்வளவு படு வேகத்தில் அந்த பேருந்தை ஓட்டி வந்தவன் மனிதன் தானா?.. முதலாளி கொடுக்கும் பிச்சை காசுக்கு, நேரத்தை மிச்சப்படுத்தி, பணத்தை வசூல் செய்ய கண்மூடித்தனமாக பேருந்தை ஓட்டி வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒரு வகையில் கொலைகாரர்கள் தான். பேருந்துக்குள் உட்கார்ந்து கொண்டு அந்த வேகத்தை ரசிக்கும் அனைத்து பயணிகளும் கொலைக்கு துணை போனவர்கள் தான். அவர்கள் யாருமே இவ்வளவு வேகத்தில் போனால் அது ஆபத்து என்று கண்டிப்பதற்கு வக்கற்றவர்களாக இருக்கிறார்கள். பயணிகளை இறக்கி ஏற்றுவதற்கு என்று இருக்கக்கூடிய இடங்களில் பேருந்து நிறுத்தாமல் அதை விட்டுத் தள்ளி போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்தும் அந்த ஓட்டுனர்களை நிறுத்தி கேள்வி கேட்பதற்கு பெரியநாயக்கன்பாளையத்தில் ஆண் பிள்ளைகள் இல்லை. அவர்களைக் கண்டிக்கும் பேரதிகாரம் கொண்ட காவல்துறையினர் கூட கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்றால், இது இப்படியே தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். பளபளக்கும் பாடங்கள் அமைப்பது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளத்தானே தவிர, அசுர வேகத்தில் சென்று உயிரை எடுப்பதற்கு அல்ல என்ற சுய சிந்தனையை அத்துணை ஓட்டுனர்களும் மனதில் கொள்ள வேண்டும். சாலை விபத்தில் சாகிறவர்கள் யாரோ என்று நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் ஒன்று அவர்களுக்கும் குடும்பம் உண்டு. வாழ்க்கை உண்டு. தயவு செய்து புது சாலைகளில் சாலை தடுப்புகளை வையுங்கள். வேகத் தடைகளை உடனே வையுங்கள். சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்களின் லைசென்ஸ் பறிமுதல் செய்து சிறையில் அடையுங்கள்.