திருச்சி பொன்மலை பகுதியில் ரயில்வே சொந்தமாள இடங்களில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பாழடைந்த குடியிருப்புகளை ரயில்வே நிர்வாகம் அகற்றும்
பணியை செய்து வருகிறது. பல ஆண்டுகளாக இந்த குடியிருப்புகள் பயன்படாத நிலையில் ரயில்வே நிர்வாகம் நிர்வாக தங்களுடைய
பயன்பாட்டிற்காக இந்த இடங்களை பயன்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது காலியாக உள்ள பொன்மலை குடியிருப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பொன்மலை கம்பிகேட் பள்ளிவாசலை அகற்றும் பணிகளை கடந்த சில நாட்களாக ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பள்ளி வாசலை அகற்றக்கூடாது என்று பள்ளிவாசலின் பொருளாளர் வியாபத் கான்
தலைமையில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இதில் திமுக வட்ட செயலாளர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தனர். இந்த தகவல் அறிந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் உடனடியாக பள்ளி வாசலை அகற்றும் ஊழியர்களிடம் பள்ளி வாசலை அகற்ற கூடாது எனகூறி, தடுத்து நிறுத்தி உள்ளார்.
இதனை அறிந்த பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கோட்ட மேலாளருக்கு நன்றி தெரிவித்து
கலைந்து சென்றனர்.