கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷீத் என்பவருக்கு சொந்தமான ‘EMBELLSGE’ என்ற நிறுவனம் குனியமுத்தூர் அடுத்த அறிவொளி நகர பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு நகைக்கடைகளில், நகைகளை வைக்க பயன்படுத்தப்படும் நகைப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவைப்புதூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முடியாததால் ரசாயன நுரை கொண்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.