உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இங்கு 140 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 96கோடியே 88 லட்சத்து 21 ஆயிரலத்து 926 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 6 சதவீத வாக்காளர்கள் அதிகரித்து உள்ளனர்.
இவர்களில் ஆண் வாக்காளர்கள் 49 கோடியே, 72 லட்சத்து, 31 ஆயிரத்து 994 பேர். பெண் வாக்காளர்கள் 47 கோடியே 15 லட்சத்து, 41 ஆயிரத்து 888 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48 ஆயிரத்து 044 பேர். மாற்றுத்திறனாளி வாக்காளிகள் 88 லட்சத்து 35 ஆயிரத்து 449 பேர்.
1 கோடியே84 லட்சத்து 81 ஆயிரத்து 610 பேர் முதல் வாக்காளர்கள். இவர்கள் 18 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள். இந்த தேர்தலில் தான் முதன் முதலாக வாக்களிக்க உள்ளனர்.
2லட்சத்து 38ஆயிரத்து 791 பேர் 100வயதை கடந்த வாக்காளர்கள். 100 பேர் மக்கள் தொகையில் 66.76% பேர் வாக்காளர்களாக உள்ளனர். ஆயிரம் ஆண் வாக்காளர்களுக்கு 948 பெண் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை பெண் வாக்காளர்கள் அதிகம் என்றபோதிலும், இந்தியாவில் ஆண் வாக்காளர்கள் தான் அதிகம்.
இந்தியாவில் நடைெ பறும் மக்களவை தேர்தல் தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்பதில் நாம் பெருமை கொள்வோம்.