திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தமிழ்நாடு காகித ஆலையின் 2வது யூனிட் செயல்பட்டு வருகிறது. இந்த யூனிட்டை ரூ.300 கோடியில் தமிழக அரசு விரிவுபடுத்துகிறது. இங்கு ஆண்டுக்கு 34ஆயிரம் டன் டிஸ்யூ காகிதங்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. முகம் துடைக்கும் டிஸ்யூ, கழிவறை டிஸ்யூ, நேப்கின் மற்றும் சமையலறை டவல்கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
டிஎன்பிஎல் யூனிட், தமிழக அரசின் நிறுவனம். பகாஸ் மூலப்பொருளை கொண்டு காகிதம் உற்பத்தி செய்வதில் உலகின் முன்னணி நிறுவனம் ஆகும். இதன் மொத்த உற்பத்தி தி்றன் ஆண்டுக்க 4 லட்சம் டன். 2030க்குள் 10 லட்சம் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.