கடந்த 5ம் தேதி நமது இதமிழ் செய்தியில் ” என்ன நடக்குது திருச்சி அதிமுகவுல புலம்பும் தொண்டர்கள்…” என்கிற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் கடந்த மாதம் வெளியான பட்டியலில் மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக முன்னாள் கோட்டத்தலைவர் ஞானசேகரன் அறிவிக்கப்பட்டார். அது குறித்த தகவலும் மாவட்ட செயலாளருக்கு தெரியாது. அவரும் எழுதி கொடுக்கவில்லை. அந்த முறை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் திருகுமரன் பரிந்துரையில் அந்த பதவி வழங்கப்பட்டது. . ” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் திருக்குமரன் மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கும் அரசியலுக்கும் சம்மந்தம் இல்லை என்றும் அதிமுகவில் தான் பரிந்துரை செய்து பதவி வாங்கி கொடுத்தாக கூறப்படும் தகவல் உண்மையில்லை என்று கூறினார். அதேபோல் கருமண்டபத்தை சேர்ந்த முன்னாள் கோட்டத்தலைவர் ஞானசேகரன் தனக்கு மாநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள தவறு தனக்கு அமைப்புசாரா ஒட்டுனர் அணி பதவி வழங்கபட்டுள்ளது. ஆனால் வர்த்த அணி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தனக்கு எந்த நபரும் பரிந்துரை செய்யவில்லை என்றும் மாவட்ட செயலாளரின் பரிந்துரையின் பெயரிலேயே பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசனும் விளக்கம் அளித்துள்ளார்.