தமிழ் திரையுலகில் என்றும் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. தனக்கென்று தனி ஸ்டைல், அதிரடி பஞ்ச் டையலாக் என, கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டுள்ளார் ரஜினி . அன்று முதல் இன்று வரை எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அவர் சொல்லும் ஒற்றை சொல் தமிழ் நெஞ்சங்களை சிலாகித்து விடும். “என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே” தமிழ் நடிகர்களில் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் என்றால் அது நிச்சயமாக சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. அபூர்வ ராகங்கள் தொடங்கி லால் சலாம் வரை இவருடைய திரை பயணம் நீண்டு கொண்டிருக்க இவருக்கான ரசிகர்கள் தலைமுறை தலைமுறையாக முளைத்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகை ஆகாது.
ரஜினி ரசிகர்கள் சென்னை ரோகினி திரையரங்க வாயிலில் பிரமிக்க வைக்கும் வகையில் வைத்துள்ள 50 அடி உயர கட் அவுட் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பெங்களுருவில் இருந்து சுமார் இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை டன் பூக்களால் ஆன மாலையை சென்னை கொண்டு வந்து கிரேன் உதவியோடு ரஜினி கட்டவுட்க்கு அணிவித்துள்ளனர். 40 ஆண்டு காலமாக பெங்களூருவில் கட்அவுட் வைத்து கொண்டாடிய நிலையில் தற்போது சென்னையில் கட்டவுட் வைத்து ரஜினியின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தி உள்ளனர் அவரது கர்நாடக ரசிகர்கள். இப்படி குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை என்றும் அனைவரின் இதயங்களிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி பயணம் தொடரட்டும்.
இந்தநிலையில் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவிற்கு தனது X- தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினி கூறியிருப்பதாவது. என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம்
மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று இவ்வாறு பதிவிட்டுள்ளார்.