Skip to content
Home » ED விசாரணைக்கு 29ல் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்….. டில்லி கோர்ட் உத்தரவு

ED விசாரணைக்கு 29ல் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்….. டில்லி கோர்ட் உத்தரவு

  • by Senthil

டில்லி முதல்வராக இருப்பவர்  அரவிந்த் கெஜ்ரிவால். இவரது ஆம் ஆத்மி கட்சி, டில்லி, பஞ்சாப் இரு மாநி்லங்களிலும் ஆட்சி நடத்தி வருகிறது. ஏற்கனவே டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை  அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த  நிலையில் அமலாக்கத்துறை மூலம்  கெஜ்ரிவாலையும் கைது செய்து அங்கு ஆட்சி கவிழ்ப்பு நடத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

மணிஷ் சிசோடியா கைது வழக்கை தொடர்ந்து  கெஜ்ரிவாலிடமும் விசாரணை நடத்த வேண்டும் என அவருக்கு அமலாக்கத்துறை இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.  தனது ஆட்சியை கவிழ்க்க  என்னை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது என அவர்  கூறிவந்தார்.

இந்த நிலையில்  அவரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடுமாறு டில்லி ரோஸ் கார்டன் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி வரும்  29ம் தேதி  கெஜ்ரிவால்  அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!