தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… இதுவரையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வில்லை. அதேபோல் எந்த கட்சியும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. வரும் 12ம் தேதி தான் யாருடனுடன் கூட்டணி என்பது குறித்து அறிவிப்போம். எங்களைப்பொருத்தவரை 14 லோக்சபா மற்றும் ஒரு ராஜ்யசபா கொடுக்கும் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி 4 மண்டலங்களிலும் தேமுதிக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு தேமுதிக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு பிரேமலதா கூறினார்.
14+1 கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி… தேமுதிக அறிவிப்பு..
- by Authour