தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். இதில் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் நூலை தமிழில் மொழி பெயர்த்த எழுத்தாளர் சிவலிங்கம் கலந்துக் கொண்டு பேசினார். இதில் முது நிலை ஆசிரியர் லோகநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரை, பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் முத்துலட்சுமி, என்.எஸ்.எஸ். அலுவலர் முருகன், என்.சி.சி. அலுவலர் சரவணன், உடற் கல்வி ஆசிரியர் செல்வகுமார் உட்பட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். முதுநிலை ஆசிரியர் காந்தி நன்றி கூறினார்.